By

நரம்பு மண்டலத்தைத் தாக்கும் கொடிய நச்சான பாதரசம், புத்திக்கூர்மையை பாதித்து நடத்தைகளைப் பாதிக்கும் லெட் என்ற ஈயம், கண், மூக்கு, தொண்டை பகுதிகளில் எரிச்சலை உருவாக்கி சுவாசக் கோளாறை உருவாக்கும் நைட்ரஜன் ஆக்சைடு உள்ளிட்டவை இந்த குப்பை எரி உலைகளில் இருந்து வெளிவரும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்…

திருவொற்றியூர் முதல் அண்ணா நகர் பகுதிகளில் இருந்து பெறும் திடக்கழிவுகள், தென்சென்னையில் பெறும் மட்காத கழிவுகள் உள்ளிட்டவைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் ‘குப்பை எரி உலைகளை கொடுங்கையூரில் சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் நிறுவ ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
வடசென்னையின் திடக்கழிவுகளில் சுமார் 500 மெட்ரிக் டன் நெகிழி கழிவுகள் உள்ளிட்ட 2,100 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் எரிக்கப்பட்டால், சுற்றுச்சூழலில் மிகப்பெரிய அழிவை சந்திக்க நேரிடலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திடக்கழிவுகளில் பெருகி உள்ள அதிக எரிதிறன் கொண்ட நெகிழி, காகிதங்கள் உள்ளிட்டவைகளை எரித்து பெறும் வெப்பத்தோடு, பாய்லர் நீரை நீராவி ஆக்கி மின்சாரம் பெறுவதே இதன் நோக்கமாகும்.

This was originally published in Thanthi TV and can be read here.

Centre for Financial Accountability is now on Telegram and WhatsApp. Click here to join our Telegram channel and click here to join our WhatsApp channel and stay tuned to the latest updates and insights on the economy and finance.