குப்பை எங்கள் உரிமை – பூனே தொழிலாளர்களின் வெற்றிகரமான முன்மாதி
பூனேயின் ‘திடக்கழிவு சேகரிப்பு மற்றும் கையாளுதல் கூட்டுறவு’ (The Solid Waste Collection and Handling cooperative or SWaCH) அமைப்பானது மூன்றாயிரத்து தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட சுய-தொழில் செய்யும் உறுப்பினர்களைக் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய குப்பை சேகரிக்கும் தொழிலாளர் கூட்டமைப்பாகும். முற்றிலும் தொழிலாளர்களுக்கு சொந்தமான கூட்டுறவு அமைப்பாக...